ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல்.. (வீடியோ)

79பார்த்தது
பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்ட 5 மாத குழந்தை, ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் ஆம்புலன்ஸில் பெங்களூருவில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதால் டிரைவர் ஜான் ஆம்புலன்சை வேகமாக ஓட்டினார். இந்த நிலையில், ஆம்புலன்ஸ் முன்னால் சென்ற இன்னோவா காரை முந்தி சென்றது. இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த சிலர், ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து நெலமங்களா சுங்கச்சாவடியில் நிறுத்தி டிரைவரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி