திருவெண்ணெய்நல்லுாரில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

79பார்த்தது
திருவெண்ணெய்நல்லுாரில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில், மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தேர்வு செய்யப்பட்ட திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு நடத்தி வருகிறார்.

அதனடிப்படையில், நேற்று (அக்.,20) திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தில் உள்ள பால் கொள்முதல் நிலையத்தினை பார்வையிட்டு, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பாலின் தரம் கண்டறியப்படுவதை பார்வையிட்டார். மேலும் கெள்முதல் செய்யப்படுகின்ற பாலுக்கு பணம் பட்டுவாடா சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை உற்பத்தியாளர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஆனத்துார் அரசு கால்நடை மருத்துவமனையை பார்வையிட்டு, கால்நடைகளுக்கான மருந்து கையிருப்பு குறித்தும், இப்பகுதியில் உள்ள கால்நடைகளின் விவரம் மற்றும் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகளின் பதிவேடுகள் ஆய்வு செய்தார். பின், ஆனத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி விளையாட்டு மைதானத்தினை முறையாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆவின் பொது மேலாளர் ராஜேஷ், திருவெண்ணெய்நல்லுார் தாசில்தார் செந்தில்குமார், பி. டி. ஓ. , ரவி, கால்நடை உதவி மருத்துவர் ரதி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி