விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் ஆறுபடையப்பன் கோவிலில் பங்குனி கிருத்திகை விழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 7: 00 மணிக்கு மூலவர் ஆறுபடையப்பன் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சக்திவேல் வீதியுலா மற்றும் மிளகாய் பொடி ஆபிஷேகமும், குளக்கரையில் அலகு குத்துதல், காவடி பூஜையும் நடந்தது. அதனையடுத்து, தீ மிதி விழாவும், தேரோட்டமும் நடந்தது. இரவு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.