திண்டிவணத்தில் ராமதாஸ் விட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள்

54பார்த்தது
பா. ம. க கட்சியின் தலைவராக இருந்து வந்த அன்புமணியின் பதவி நேற்று நிறுவனர் ராமதாசால் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராமதாசால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் ராஜேஷ் ஆதரவாளர்கள், திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவிலுள்ள ராமதாசின் வீட்டின் எதிரில்மீண்டும் அன்புமணிக்கு கட்சி தலைவர் பதவி வழங்க கோரி, கோஷம்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்த வந்த, பா. ம. க. , மாவட்ட செயலாளர் ஜெயராஜிக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டதின் பேரில் மோதல் தவிர்க்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி