திண்டிவனம் கிடங்கல்(2) பகுதியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 36. 28 லட்சம் மதிப்பீட்டில் நவீன பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவிற்கு நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் தலைமை தாங்கினார். விழுப்புரம் எம். பி. , ரவிக்குமார் முன்னிலையில், அமைச்சர் மஸ்தான் ரிப்பன் வெட்டி நேற்று(செப்.18) திறந்து வைத்தார். இதில் நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர தி. மு. க. , செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.