பாமக உடன் கூட்டணி இணைந்த பின்பு அண்ணாமலை அளித்த பேட்டி

71பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாவட்டத்தில் தைலாபுரம் தோட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்பு அண்ணாமலை பேட்டி அளித்தார். அதில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு, 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர்.
மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்.
தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது. ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் - அண்ணாமலை என தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி