மயிலம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 47ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சந்தோஷ் வரவேற்றார். கீழ்மாம்பட்டு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து பேசினார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான தப்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம், யோகா, பிரமிட் மற்றும் ஓட்டம், பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் ரெட்டணை தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் மகேஸ்வரன் பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாக அலுவலர் சுரேந்தர் நன்றி கூறினார்.