ஆல கிராமம் கோவிலில் சவுமிய வார பிரதோஷம்

50பார்த்தது
திண்டிவனம் செய்தியாளர் ஜோதிபாபு 94433 84264

திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் திரிபுர சுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் சவுமிய வார பிரதோஷ விழா நடந்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக புதன் கிழமைகளில் வரும் பிரதோஷம் சவுமிய வார பிரதோஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் பகுதியில் கோவில் கொண்டுள்ள திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் சவுமிய வார பிரதோஷ விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் உற்சவர் திரிபுரசுந்தரி உடனுரை எமதண்டீஸ்வரருக்கு பால், தயிர், பச்சரிசி மாவு, மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நந்திபகவான் மலர்களால் அலங்கரிக்கப்படும், மூலவர் எமதண்டீஸ்வரர் சந்தன காப்பு அலங்காரத்திலும், திரிபுரசுந்தரி மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் காட்சியளித்தனர். மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி