பாலத்தின் கீழ் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

73பார்த்தது
பாலத்தின் கீழ் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் உள்ள சென்னை-திருச்சி தேசிய

நெடுஞ்சாலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால் பொதுமக்களுக்கு வயிற்று போக்கு, டெங்கு உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.

தொடர்புடைய செய்தி