இரவில் தலைக்கு குளித்தால் நிம்மதியான உறக்கம் வரும் என்பது பலரின் எண்ணம். ஆனால், இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இரவில் தலைக்கு குளிக்கும்போது ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்வதால், முடிகளில் நார்ச்சத்து இழப்பு ஏற்பட்டு முடி உதிரும். இது முடி இழைகள் மற்றும் உச்சந்தலையில் சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஈஸ்ட் மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவற்றுக்கும் வழிவகுக்கும்.