பதவி பறிப்பால் ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட தி. மு. க

69பார்த்தது
பதவி பறிப்பால் ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட தி. மு. க
மாவட்டத்தில் பொன்முடி, மஸ்தான் என இரு அமைச்சர்கள் இருந்ததால், கட்சியினர் இரு கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர்.

வடக்கு மாவட்ட தி. மு. க. , வில் உள்ள திண்டிவனம், செஞ்சி, மயிலம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில் மஸ்தானின் ஆதரவாளர்கள் அதிகம். அவரது ஆதரவாளரான சேகர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர்கள் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில், பொன்முடி ஆதரவாளர்கள் பட்டும் படாமலும் பங்கேற்று வந்தனர்.

இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்தில் மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, இரு அணியாக செயல்பட்டு வந்த தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட துவங்கியுள்ளனர். முதல்கட்டமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததை வரவேற்று இரு அணியினரும் இணைந்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி