பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கியவர்கள் கைது

66பார்த்தது
பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கியவர்கள் கைது
அவலுார்பேட்டை அடுத்த மானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி ஜோதி, 50; கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரு, கரப்பாளையத்தில் வேலை செய்து வந்தர். அங்கு, வேலுார் மாவட்டம் குடியாத்தம்-கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரமேஷ் மகன் மகேஷ், 24; டிரைவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மானந்தல் கிராமத்திற்கு வந்திருந்த ஜோதியிடம், கடந்த மார்ச் 24ம் தேதி மகேஷ், அவரது அண்ணன் சிரஞ்சீவி, 25; ஆகியோர் மூன்று மாதத்தில் திருப்பி தருவதாக கூறி மூன்றரை சவன் நகை மற்றும் ரூ. 3. 25 லட்சம் பணத்தை வாங்கிச் சென்றனர். இந்நிலையில்நேற்று முன்தினம் மீண்டும் ரூ. 2 லட்சம் பணம் கேட்டனர். அதற்கு ஜோதி, ஏற்கனவே கொடுத்த பணமே தரவில்லை எனக் கேட்டதற்கு, இருவரும் ஆபாசமாக திட்டி மிரட்டினர். இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சிரஞ்சீவி, மகேஷ், ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :