செஞ்சி அடுத்த கல்யாணம்பூண்டியில் காணை, விக்கிரவாண்டி ஒன்றிய கிளை நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்களுக்கான அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அறவாழி முன்னிலை வகித்தார். கிளை ஒருங்கிணைப்பாளர்கள் வேல்முருகன், மணிவண்ணன், குழந்தைவேலு, ரங்கநாதன், செந்தில் ராஜா, பாலமுருகன், கார்த்திகேயன், வழக்கறிஞர் ஆதிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், நந்தன் கால்வாய் மூலம் பாசனம் பெறும் கிராமங்களில் கிளைகளை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.