விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செஞ்சி கோட்டையில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இவைகள் சில நேரங்களில் சுற்றுலா பயணிகளை கடிக்க விரட்டுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.