மணிப்பூர் விவகாரத்தில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது. தமிழ்நாட்டில், பா.ஜ.கவை இந்துத்துவா கட்சி என்று கூறினால், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டுகளை வாங்கலாம் என விஜய் எண்ணுகிறார். கோவா, மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமுள்ளனர். அங்கெல்லாம் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது என்பதை விஜய் தெரிந்துகொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.