234 தொகுதியிலும் எதிர்கட்சிகள் டிபாசிட் இழக்கும்- மஸ்தான்

53பார்த்தது
234 தொகுதியிலும் எதிர்கட்சிகள் டிபாசிட் இழக்கும்- மஸ்தான்
எதிர்வரும் 2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளும் டிபாசிட் இழக்கும்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.

வல்லம் வடக்கு ஒன்றிய தி. மு. க. , செயல்வீரர்கள் கூட்டம் நாட்டார்மங்கலத்தில் நேற்று (செப்.10) நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜலிங்கம், மணிமேகலை ரவிச்சந்திரன், ஞானமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான், மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர் மாசிலாமணி, தீர்மானகுழு உறுப்பினர் சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில், 'தி. மு. க. , 2 கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாதுரையாக, தொண்டர்களை உடன் பிறப்பே என்று அழைத்த கருணாநிதியாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். கல்வியால் தமிழகம் தலைநிமிர வேண்டும் என புதுப்புது திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இதற்கு முன் வரை தேர்தல் வந்தால் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க வேண்டும். இந்த முறை மக்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்பதற்கு வாய்ப்பே இல்லாமல் ஒவ்வொரு வீட்டிற்கும் தமிழக அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளது. தமிழக முதல்வர் 2026 தேர்தலில் 200 இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள சாதனைகள் 234 தொகுதியிலும் எதிர்கட்சிகள் டிபாசிட் இழக்கச் செய்து விடும்' என்றார்.

தொடர்புடைய செய்தி