போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வீடியோவில் மு.க.ஸ்டாலின், "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம். தமிழ்நாடு மக்கள், இளைஞர்கள், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தில் ஒருவனாக,உங்கள் தந்தையாக வேண்டுகோள் வைக்கிறேன். போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம், போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.