உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் நவ.11-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சஞ்சீவ் கண்ணா உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக நவ. 1 1 -ம் தேதி பதவியேற்க உள்ளார்.