மகள் மாயம் - தாய் காவல் நிலையத்தில் புகார்

80பார்த்தது
மகள் மாயம் - தாய் காவல் நிலையத்தில் புகார்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமாரன் மகள் தீபா, (21); இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து நின்று விட்டார். கடந்த 19ம் தேதி காலை 5: 30 மணிக்கு வேலை செய்த நிறுவனத்தில் பிடித்தம் செய்திருந்த பணத்தை வாங்கி வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து அவரது தாய் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், நேற்று (செப்.,20) அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி