கோவில் திருவிழா முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆலோசனை

64பார்த்தது
கோவில் திருவிழா முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆலோசனை
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழா, திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் பவுர்ணமி திருவிழாவையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி அமாவாசை திருவிழாவும், 16ம் தேதி திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஜோதி திருவிழா நடக்கிறது. பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக, ஊராட்சி ஒன்றியம் சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர், தற்காலிக கழிப்பறை, வள்ளலார் மடம், தற்காலிக பஸ் நிறுத்தங்கள், கோவிலுக்கு செல்லும் வழிகளில் குப்பை தொட்டி அமைத்தல், துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். போக்குவரத்து துறை, சிறப்பு பஸ் வசதி செய்ய வேண்டும்' என்றார். எஸ். பி. , தீபக் சிவாச், இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி