குஜராத்: தர்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் அணில் மெதானியா 18 என்ற மாணவர் படித்து வருகிறார். நவ.16-ம் தேதி இரவு 15 சீனியர் மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்துள்ளனர். அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்ததில் அணில் மெதானியா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை சக மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.