எரிமலை என்பது பூமியின் மேலோட்டத்தில் உள்ள ஒரு திறப்பு அல்லது சிதைவு ஆகும். இச்சிதைவு சூடான எரி கற்குழம்பு, எரிமலைச் சாம்பல் மற்றும் வாயுக்கள் மேற்பரப்புக்கு கீழே உள்ள ஒரு மாக்மா அறையிலிருந்து வெளியேற அனுமதிக்கிறது. உலகில் உயிரோட்டத்துடன் இருக்கும் மிகப்பெரிய எரிமலையாக ஓஜோஸ் டெல் சலாடோ (Ojos del Salado) உள்ளது. இது சிலி - அர்ஜென்டினா எல்லையில் காணப்படுகிறது. 6,893 மீட்டர் (22,615 அடி) உயரம் கொண்டுள்ளது.