உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும், தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், லக்னோ லூலூ மாலில் நடைபெறும் நகைக்கடை திறப்பு விழாவில் உத்தரபிரதேச மருத்துவத்துறை அமைச்சர் பிரஜேஷ் பத்தக் பங்கேற்றது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.