நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதாக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகி வருவதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் நாதக-வில் இருந்து விலகி விஜய்யின் தவெக-வில் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.