இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே சிலருக்கு விழிப்பு வந்துவிடும், பிறகு தூக்கம் வராது. இதன் காரணமாக பகல் பொழுதுகளில் ஓய்வுக்காக உடல் ஏங்கும். இதை தடுத்து இரவில் ஆழ்ந்த தூக்கத்தை அளிக்கும் சக்தி சில பழங்களுக்கு உண்டு. ஆப்பிள், அவகேடோ, வாழைப்பழம், கிவி பழம் போன்றவை உறக்கத்துக்கு உத்தரவாதம் தருபவை. தூக்கத்துக்கு இடையில் கண்விழிக்கிறவர்கள் உறங்கப் போவதற்கு முன்னர் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.