ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. சென்னையைத் தொடர்ந்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.2) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில், ஃபெஞ்சல் புயல் சேதங்கள் குறித்து மத்திய அரசிடம் நிதி கோருவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.