விக்கிரவாண்டி - பாமக சார்பில் சி.அன்புமணி போட்டி!

7119பார்த்தது
விக்கிரவாண்டி - பாமக சார்பில் சி.அன்புமணி போட்டி!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் பாமகவைச் சேர்ந்த சி.அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திமுக சார்பில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, நாதக சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதே போல் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தொகுதியில் வருகிற ஜுலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி