பரந்தூருக்கு சென்ற தவெக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் சேகர்பாபுவிடம், விஜய் திமுகவை விமர்சித்ததோடு போராட்ட களத்துக்கும் வந்துள்ளாரே என கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், "ஆமாம், அன்னா ஹசாரே மாதிரி தொடர்ந்து ஒரு வருடம் விஜய் உண்ணாவிரதம் இருந்தாரு” என கிண்டலாக விமர்சித்தார். மேலும் நேற்றைய நிகழ்வு நேற்று, இன்று நாங்கள் பணியில் உள்ளோம் என்றார்.