சினிமாவில் நடிகர் விஜய் வெற்றிகரமாக இருப்பதற்கு விஜயகாந்த் தான் முக்கிய காரணம் என விஜய் பல இடங்களில் கூறியிருக்கிறார். சமீபத்தில் விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்தனர். இந்த நிலையில், விஜய் நடிக்கப்போகும் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்க விஜய் உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.