"புஷ்பா 2" திரைப்படம் வெளியான 11 நாட்களில் 1409 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிவேகமாக 1000 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை "புஷ்பா 2" படைத்துள்ளது. வரும் நாட்களில் இத்திரைப்படம் 2000 கோடி ரூபாய் வசூலை கடந்து "தங்கல்" திரைப்பட வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.