புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’ இப்படம் நாளை(05.12.2024) தமிழ், தெலுங்கு என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டது. இந்நிலையில், முன்பதிவில் மட்டும் உலகம் முழுவதும் இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்படம் கல்கி 2898 ஏ.டி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது