அன்னையர் தின வாழ்த்து கூறிய விஜய்

54பார்த்தது
அன்னையர் தின வாழ்த்து கூறிய விஜய்
உலகம் முழுவதும் இன்று(மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘X’ தளத்தில் அன்னையர் தின வாழ்த்து கூறியுள்ளார். அதில், “அன்பின் முழு உருவமாய்த் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமில்லை, எந்நாளும் போற்றி வணங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி