சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சரிதா என்பவரது இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இரவு தூங்குவதற்கு வீட்டில் இடமில்லாத காரணத்தினால் சிலர் நேற்று(மே 11) வீட்டு வாசலில் தூங்கியுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரின் கால்கள் மீது ஏறியது. இதில் 2 பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கூகுள் மேப்பை நம்பி முட்டுச் சந்துக்குள் காரை விட்டதாக வட மாநிலப் பெண் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.