கைதியை சித்திரவதை செய்த போலீஸ் - பகீர் வீடியோ

17672பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினர். ஒரு தாக்குதல் வழக்கில், சுரேஷ் குர்ஜார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டார். அவரை தரையில் உட்கார வைத்து, தாடி முடியை கைகளால் பறித்து கொடுமை செய்துள்ளனர். இதனால், வலி தாங்காமல் அழுவதையும், தலைமுடியை இழுப்பதையும் போலீசார் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த காவலர்கள் சஸ்பெண்ட் மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி