பெண் காவலர்களை தகாத முறையில் பேசியதாக சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையில் வைத்து போலீசாரால் சவுக்கு சங்கர் தாக்கப்பட்ட நிலையில் அவரது கையில் முறிவு ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து அவர் மீது கஞ்சா வழக்கும் பதியப்பட்டது. இந்நிலையில், “சவுக்கு சங்கர் பேசியது தவறு தான். ஆனால் பழிவாங்குவதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது” என இன்று தமிழிசை சௌந்தரராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.