விஜய் பேனரால் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் (வீடியோ)

11559பார்த்தது
நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைத்தனர். அந்தவகையில் கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று பலத்த காற்று வீசியதன் காரணமாக கீழே விழுந்தது. அப்போது அதன் அருகே நின்றிருந்த 10 வயது சிறுவன் மீது அது விழுந்தது. உடனே அங்கு நின்றிருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பேனரை அப்புறப்படுத்தி சிறுவனை மீட்டனர். இதனால் சிறு காயங்களுடன் சிறுவன் தப்பித்தார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி