வேலு நாச்சியார் பிறந்த நாள்.. தவெக விஜய் வாழ்த்து

85பார்த்தது
வேலு நாச்சியார் பிறந்த நாள்.. தவெக விஜய் வாழ்த்து
விடுதலை போராட்ட வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது பனையூர் கட்சி அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி