வேலூர் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் செய்தியாளர் சந்திப்பு

2608பார்த்தது
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மற்றும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ. சி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் 95% நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை என்ற மலை கிராமத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் 3 பஞ்சாயத்துகள் இருக்கிறது. அப்பகுதியில் எங்களை வாக்காளர் பூத் கூட பார்வையிட அனுமதிக்கவில்லை. குண்டர்கள் போல் தி. மு. க-வினர் செயல்பட்டனர். என்னுடைய சார்பில் புகார் மனு ஒன்று மாவட்ட தேர்தல் அலுவலருக்கு கொடுக்கப்பட்டது.

அதில் அப்பகுதியில் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படை அனுப்புங்கள் என்று நான் அந்த மனுவில் கேட்டுக் கொண்டேன். ஆனால் நான் கேட்டது அங்கு முறை படுத்தவில்லை. மேலும் எங்களுடைய பூத் ஏஜெண்டுகளை அடித்திருக்கிறார்கள். கே. வி குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியிலும் பூத் கேப்சரிங் நடந்து இருக்கிறது.

தி. மு. க-வினர் காவல் துறையினரை பயன்படுத்தி பல இடங்களில் எங்களுக்கு அழுத்தங்கள் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகியை தி. மு. க-வினர் அடித்துள்ளனர். ஆனால் வழக்கு அடிவாங்கியவர் மீது பதியப்பட்டுள்ளது, என்றார்.

தொடர்புடைய செய்தி