வேலூர்: கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் காயம்!

74பார்த்தது
வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவரது வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் பழுது ஏற்பட்டதால் அதற்க்கான ஆட்களை வரவழைத்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்த விபத்தில் விஜயா, இவரது 2 மகள்கள், பழுது பார்க்க வந்த சூர்யா, விக்னேஷ் ஆகிய 5 பேர் படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விரைந்து வந்த வேலூருக்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி