மின் ஒயர் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு!

81பார்த்தது
வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே திருச்சியிலிருந்து திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வந்த போது பழைய வேலூர் - பெங்களூர் சாலையில் உள்ள வேலூர் ரயில்வே கேட்டை மூடியுள்ளனர்.

அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மோதியதில் ரயில்வே கேட் இரும்பு கம்பி உடைந்து உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்துள்ளது.

பின்னர் ரயில் டவுன் ரயில்வே நிலையம் அருகிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த 25-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மின்கம்பியை சரி செய்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்பு பயணிகள் விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி