மண்டல கிராம வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், ஒரு மாநிலத்தில் பொதுத்துறை வங்கிகளின் ஆதரவுடன் செயல்படும் மண்டல கிராம வங்கிகள் இடையே தேவையற்ற போட்டியை தவிர்க்கும் விதமாக, 'ஒரு மாநிலம், ஒரு மண்டல கிராம வங்கி' என்ற கொள்கையை அமல்படுத்த மத்திய நிதியமைச்சகம் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் நாடு முழுவதும் தற்போது உள்ள 43 மண்டல கிராம வங்கிகளின் எண்ணிக்கை, 30 ஆக குறைக்கப்படும்.