ஐ. எப். எஸ். நிதி நிறுவன இயக்குனர் வெளியிட்ட வீடியோ வைரல்

1085பார்த்தது
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ. எஃப். எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் கோடிக்கணக்கில் பண மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நிதி நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இந்த ஆண்டுக்குள் அனைவரின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். பிரச்சனையை தீர்க்க கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடினமாக முயற்சி செய்து வருகிறேன். அனைவரின் பிரச்சனையையும் சரி செய்ய ஒரு ஐடியா கிடைத்துள்ளது. நான் உங்களுடன் இருக்கிறேன். என்னை ஈமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்து இறுதியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி