வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் இடம், பால் குளிரூட்டும் அறை, பால் பவுடர் உற்பத்தி, ஐஸ்கிரீம் தயார் செய்யும் இயந்திரம், நெய் பேக்கிங் செய்யும் பணி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் பால் பாக்கெட் களை வேன்கள் மூலம் ஏற்றி செல்லும் வாகனத்தை ஆட்சியர் பார்வையிட்ட போது, உடைந்து போன ட்ரேகளில் ( TRAY) பால் பாக்கெட் களை அனுப்பக்கூடாது. அனைத்தையும் உடனடியாக மாற்ற வேண்டும். உடைந்த ட்ரேகலில் அனுப்புவதால் பால் பாக்கெட் சேதமாகும். அதேபோல விழா காலங்களில் ஆட்கள் பற்றாக்குறை என கூறி பால் உற்பத்தி மற்றும் பாலை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதில் பாதிப்பு வரக்கூடாது என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.