அரக்கோணம் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தொழிலாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில் அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.