நாட்றம்பள்ளி அருகே மர்ம விலங்கு தாக்கி ஆடு பலி!

54பார்த்தது
நாட்றம்பள்ளி அருகே மர்ம விலங்கு தாக்கி ஆடு பலி!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தொப்பைகான் வட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் அன்பழகன் (40) இவர் சொந்தமாக ஐந்து ஆடுகள் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் விடியற்காலை 3 மணி அளவில் தனது கொட்டகையில் ஐந்து ஆடுகளையும் கட்டி வைத்திருந்தார்

பின்னர் காலை கொட்டகை சென்று பார்த்தபோது மர்ம விலங்கு தாக்கி ஒரு ஆடு உயிரிழந்து உள்ளது மேலும் மற்றொரு ஒரு ஆட்டை மர்ம விலங்கு தூக்கிச் சென்றது மர்மமான முறையில் மாயமாகியுள்ளன. மற்றொரு ஆடு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனை அறிந்த வாணியம்பாடி வனச்சரகர் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நாட்றம்பள்ளி கால்நடை மருத்துவர் ஜெயச்சந்திரன் உயிரிழந்த ஆட்டை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.


மேலும் இது குறித்து வனத்துறையினர் எந்த விலங்கு கடித்தது என இதுவரை தெரியவில்லை மேலும் மர்ம விலங்கை பிடிக்க நாளை கூண்டு வைக்கப்படும் மேலும் சிசிடிவி காட்சிகளும் பொருத்தப்படும் எனவும் தகவல் தெரிவித்தார்.


மேலும் இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில் தற்போது இந்த பகுதியில் அவ பொது சிறுத்தைகள் வந்து செல்வதுண்டு கண்டிப்பாக இதனை சிறுத்தை தான் தாக்கியிருக்க வேண்டும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது அதனையும் தொடர்ந்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி