1957 முதல் 1967 வரை கும்பகோணம் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் 4 சிலைகள் திருடப்பட்டது. இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் பிரிவு 2020-ல் வழக்குப் பதிவு செய்தது. இதில் திருமங்கையாழ்வார் சிலை லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் 1967-ல் சட்டவிரோதமாக வாங்கியது கண்டறியப்பட்டது. மற்ற 3 சிலைகள் அமெரிக்காவில் உள்ளது. இந்த சிலைகளுக்கு பதிலாக கோயிலில் போலி சிலைகள் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது திருமங்கயாழ்வார் சிலை மீட்கப்பட்டு தமிழகம் வர உள்ளது.