ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், கடந்த 6 மணி நேரமாக புதுச்சேரி அருகே நகராமல் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூருக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 46 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புயலின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.