நாமக்கல்-மோகனூர் செல்லும் தார் சாலை ஓரத்தில், மலையண்ணன் (70), நிர்மலா (55) தம்பதி இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் நடைப்பயிற்சி சென்றனர். அவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் (65) என்ற பெண்ணும் சென்றுள்ளார். அப்போது, காட்டூர் பெட்ரோல் நிலையம் அருகே அதிவேகமாக சென்ற ஆம்னி வேன் அவர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே தம்பதி மற்றும் பெண் ஒருவர் என மூன்று பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.