திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாட்றப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நாட்றப்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி தலைமை வகித்தார், துணைத்தலைவர் தேவராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்தியவாணி சாமுடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார சுரேஷ் பாபு, வசந்தி(திட்டம்), வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் வசுமதி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க. தேவராஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே. ஆர். சூரிய குமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து நலதிட்ட உதவிகளை வழங்கினர்.