ரத்னம் படம் இயக்குனர் ஹரி ரசிகர்களை சந்தித்தர்

57பார்த்தது
நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைபடம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது இதயொட்டி அப்படத்தின் இயக்குனர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது மேலும் வேலூர் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட் பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து படத்திற்கு பிரமோஷன் தேடினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது.
ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன். அதன்படி ஆந்திரா -தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்ப பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது.
பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள் என பேசினார்.

தொடர்புடைய செய்தி